/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்தனுாரம்மன் கோவிலில் முடி காணிக்கை இடம் திறப்பு
/
அத்தனுாரம்மன் கோவிலில் முடி காணிக்கை இடம் திறப்பு
ADDED : பிப் 27, 2025 11:22 PM
திருப்பூர், ; காங்கயம் தாலுகா, முத்துாரிலுள்ள அத்தனுாரம்மன் குப்பண்ணசாமி கோவிலில், அறநிலையத்துறை சார்பில் 48.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அலுவலக கட்டடம் மற்றும் முடி காணிக்கை செலுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது. அமைச்சர் சாமிநாதன் நேற்று, அலுவலக கட்டடம் மற்றும் முடி காணிக்கை செலுத்துமிடத்தை திறந்துவைத்தார்.
வெள்ளகோவில் ஊராட்சியில், வருவாய்த்துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா; 144 பேருக்கு இ- பட்டா; ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒருவருக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்பட மங்கலப்பட்டி, பூமாண்டவலசு, வேலம்பாளையம் கிராமங்களை சேர்ந்த மொத்தம் 169 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. முன்னதாக, சின்னமுத்துார் செல்வகுமாரசாமி கோவில் தேர்த்திருவிழாவில் பங்கேற்ற அமைச்சர், தேரை வடம் பிடித்து இழுத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.