/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விஸ்தாரா ஹோட்டல் திருப்பூரில் திறப்பு
/
விஸ்தாரா ஹோட்டல் திருப்பூரில் திறப்பு
ADDED : மார் 25, 2024 12:59 AM

திருப்பூர்:திருப்பூர், அவிநாசி ரோடு, பெரியார் காலனியில் விஸ்தாரா ஹோட்டல் திறக்கப்பட்டது.
திருப்பூர் அவிநாசி ரோடு பெரியார் காலனியில் பரணி பெட்ரோல் பங்க் வளாகத்தில் விஸ்தாரா ஹோட்டல் நேற்று மாலை திறக்கப்பட்டது. காங்., மாநகர மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஸ்ரீ பாலாஜி ரியல் எஸ்டேட் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். ஹோட்டல் நிர்வாக இயக்குனர் நடராஜ் வரவேற்றார்.
செய்திதுறை அமைச்சர் சாமிநாதன், ஹோட்டலை திறந்து வைத்தார். மூன்றாம் தளத்தில் உள்ள ஜிம்மை திருப்பூர்எம்.பி., சுப்பராயன் திறந்து வைத்தார். தெற்குஎம்.எல்.ஏ., செல்வராஜ் உடனிருந்தார்.
ரெஸ்டாரண்ட்டை கோவை எம்.பி., நடராஜன், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். துணை மேயர் பாலசுப்ரமணியன், மாநகராட்சி முதல் மண்டல தலைவர் உமாமகேஸ்வரி வெங்கடாசலம், பா.ஜ., மாநில செயலாளர் மலர்க்கொடி, தி.மு.க., வேலம்பாளையம் செயலாளர் ராமதாஸ், கோவை இந்தியன் ஆயில்மண்டல விற்பனை அதிகாரி தீபக்குமார், பாரத் பெட்ரோலியம் மேலாளர் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
திறக்கப்பட்ட ஹோட்டலில், குளிரூட்டப்பட்ட, 24 ரூம்கள், ரெஸ்டாரண்ட், ஜிம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

