/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி.,யில் தண்ணீர் திறப்பு; பாசன விவசாயிகள் ஆலோசனை
/
பி.ஏ.பி.,யில் தண்ணீர் திறப்பு; பாசன விவசாயிகள் ஆலோசனை
பி.ஏ.பி.,யில் தண்ணீர் திறப்பு; பாசன விவசாயிகள் ஆலோசனை
பி.ஏ.பி.,யில் தண்ணீர் திறப்பு; பாசன விவசாயிகள் ஆலோசனை
ADDED : ஜூலை 25, 2024 12:11 AM

பல்லடம் : பி.ஏ.பி.,யில் தண்ணீர் திறப்பது தொடர்பாக, பல்லடம் அருகே, பாசன விவசாயிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பி.ஏ.பி., பகிர்மான குழு எண்:6-ஐ சேர்ந்த கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்களுக்குக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு குழு தலைவர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார். ஆழியாறு வடிநில உபகோட்டத்தின் பொங்கலுார் உதவி செயற்பொறியாளர் அசோக் பாபு முன்னிலை வகித்தார்.
தண்ணீர் திறப்புக்கு முன்பாக பிரதான மற்றும் கிளை வாய்க்கால் சுத்தம் செய்வதற்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும். பி.ஏ.பி., பாசனப் பகுதிகளில் வறட்சி நிலவுவதால், ஆக., 15ம் தேதிக்குள் தண்ணீர் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். குறைவாக உள்ள பி.ஏ.பி., திட்ட களப்பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
பிரதான வாய்க்கால்களில் உள்ள மண் திட்டுகளை அகற்றி தண்ணீர் தங்கு தடையின்றி கடைமடை வரை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், பாசன சபை தலைவர்கள் கோபால், சுப்ரமணியம், பழனிசாமி, விவேகானந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.