/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்பள்ளிவாசல் நிர்வாகிகள் சீர்வரிசை
/
பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்பள்ளிவாசல் நிர்வாகிகள் சீர்வரிசை
பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்பள்ளிவாசல் நிர்வாகிகள் சீர்வரிசை
பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்பள்ளிவாசல் நிர்வாகிகள் சீர்வரிசை
ADDED : செப் 15, 2024 01:38 AM

திருப்பூர்: மங்கலம், ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, மங்கலம் பெரிய பள்ளி வாசல் சார்பில் இஸ்லாமியர்கள் சீர் வரிசை கொண்டு சென்று வழங்கினர்.
திருப்பூர் அடுத்த மங்கலம், சோமனுார் ரோட்டில் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் கும்பாபிேஷகம் இன்று காலை 9:00 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி கடந்த 13 ம் தேதி முதல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நேற்று காலை முதலாம் கால யாக சாலை பூஜை, இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளும் நடந்தது.
இன்று அதிகாலை நான்காம் கால யாக பூஜைகளைத் தொடர்ந்து கும்பாபிேஷகம் நடக்கிறது.
கும்பாபிேஷக விழாவில் பங்கேற்க வருமாறு, திருப்பணிக்குழுவினர், மங்கலம் சுன்னத் ஜமாத் பெரிய பள்ளி வாசல் நிர்வாகிகளுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.
அதை ஏற்று பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் திரளான இஸ்லாமியர்கள், பல்வேறு சீர் வரிசைத் தட்டுகளுடன் கோவிலுக்குச் சென்றனர். அவர்களை வரவேற்ற கோவில் நிர்வாகிகள் சீர் வரிசைத் தட்டுக்களைப் பெற்றுக் கொண்டு, பள்ளி வாசல் நிர்வாகிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு பிரசாத பைகள் வழங்கப்பட்டது. இரு தரப்பினரும் அழைப்பு விடுத்ததற்கும், விழாவுக்கு வந்ததற்கும் பரஸ்பரம் நன்றி தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஹிந்து, இஸ்லாமியர்கள் இடையே மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த செயல் இருந்ததாக, பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.