/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணி வரும் 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு
/
ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணி வரும் 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு
ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணி வரும் 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு
ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணி வரும் 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு
ADDED : மார் 24, 2024 12:42 AM

திருப்பூர் : திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான, ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணி, எல்.ஆர்.ஜி., கல்லுாரி வளாகத்தில் துவங்கியுள்ளது.
கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைகிறது. கடந்த, 2009 தேர்தலுக்கு மட்டும், கோபி கலைக்கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அதற்கு பின், அனைத்து தேர்தல்களிலும், திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டது. அதன்படி, தற்போதைய லோக்சபா தேர்தலுக்கும், அதே கல்லுாரி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்க, தேர்தல் கமிஷன் ஒப்புதல் வழங்கியுள்ளது.
6 'கவுன்ட்டிங் சென்டர்'
திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பெருந்துறை, பவானி, அந்தியூர் மற்றும் கோபி ஆகிய, ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும், தனித்தனியே ஓட்டு எண்ணிக்கை மையம் அமையும். 'ஸ்ட்ராங் ரூம்' வசதி, அருகிலேயே ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கப்படும். தேர்தல் பார்வையாளர்கள் அறை, தேர்தல் நடத்தும் அலுவலர் அறை, தபால் ஓட்டு எண்ணிக்கை மையம், மாவட்ட கட்டுப்பாட்டு அறை ஆகிய வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். ஓட்டுப்பதிவு, ஏப்., 19ம் தேதி நடந்து முடிந்ததும், ஆறு சட்டசபை தொகுதிகளில் இருந்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், இங்கு வந்து சேரும்.
இரவோடு இரவாக, 'ஸ்ட்ராங் ரூம்'மில் வைத்து, 'சீல்'வைக்கப்படும். ஓட்டு எண்ணிக்கை, 45 நாட் களுக்கு பிறகு நடக்க இருப்பதால், போலீசாரின் மூன்றடுக்கு பாதுகாப்பு; 'சிசிடிவி' கேமரா கண்காணிப்பு வசதி ஏற்பாடு செய்யப்படும்.
குறைந்த கால அவகாசம்
அதிகாரிகள் மட்டுமல்லாது, வேட்பாளர்களின் ஏஜன்டுகளும், 'ஷிப்ட்' முறையில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் காத்திருப்பர்; அதற்கான ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது. ஓட்டுப்பதிவுக்கு, 25 நாட்களே இருப்பதால், ஓட்டு எண்ணிக்கை மையத்தை தயார்படுத்த உத்தர விடப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவு நடவடிக்கை துவங்கும் முன்னதாக, ஓட்டு எண்ணிக்கை மையம் தயார்நிலையில் இருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இணையதள இணைப்பு பெறுவது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும். குறிப்பாக, ஏப்., 15ம் தேதிக்கு முன்னதாக, ஓட்டு எண்ணிக்கை மையம் தயார்நிலையில் இருக்க வேண்டுமென, காலக்கெடு வழங்கப் பட்டுள்ளது.
இதன் காரணமாக, முதல்கட்டமாக, கல்லுாரி வளாகத்தை துாய்மைப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. நாளை முதல், ஆறு சட்டசபை தொகுதிகளுக்கான, ஸ்ட்ராங் ரூம் மற்றும் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணி துவங்குமென, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

