/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில் பயணியருக்கு குடிநீர் உறுதிப்படுத்த உத்தரவு
/
ரயில் பயணியருக்கு குடிநீர் உறுதிப்படுத்த உத்தரவு
ADDED : ஏப் 27, 2024 12:21 AM
உடுமலை;வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ரயில்வே ஸ்டேஷனில் பயணியருக்கு, தேவையான அளவு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய ஸ்டேஷன் அளவில் கண்காணிக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு ரயில்வே ஜங்ஷன் மற்றும் ஸ்டேஷன்களில், குடிநீரின் இருப்பின் கொள்ளளவு, பிளாட்பார்ம்களில் குடிநீர் குழாய்கள் எண்ணிக்கை,
வந்து செல்லும் பயணியருக்கு போதுமானதாக குடிநீர் இருக்குமா அல்லது உள்ளாட்சி அமைப்புகளிடம் கூடுதலாக குடிநீர் கேட்டு பெற வேண்டுமா, டேங்கர் லாரிகள் வாயிலாக, கூடுதல் குடிநீர் பெற வேண்டுமா என்பது குறித்து, அந்தந்த ஸ்டேஷன் அளவில் முடிவெடுக்க வேண்டும்.
ரயில் பயணியரின் குடிநீர் தொடர்பான பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண, 24 மணி நேரமும் கண்காணிப்பதற்கான குழு அமைக்க வேண்டும்.
ரயில் பயணியருக்கு தேவையான குடிநீர் (தண்ணீர் பாட்டில்), பிளாட்பார்மில் அனைத்து விற்பனை ஸ்டால்களில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட, பல வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

