/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பஸ்களின் நிலை அறிக்கை அளிக்க உத்தரவு
/
அரசு பஸ்களின் நிலை அறிக்கை அளிக்க உத்தரவு
ADDED : மே 03, 2024 12:55 AM
திருப்பூர்:திருப்பூர் மண்டலத்தில், எட்டு டிப்போக்களில் இருந்து இயக்கப்படும் பஸ்களின் நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கையளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் திருச்சியில் இருந்து புறப்பட டவுன் பஸ் பரமாரிப்பு இல்லாததால், பஸ் வளைவில் திரும்பும் போது, நடத்துனர், இருக்கையுடன் கீழே விழுந்து, படுகாயமடைந்தார். இதனால், அரசு பஸ்கள் பராமரிப்பு, கண்காணிப்பு மோசமாக உள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, பஸ்கள் உரிய பராமரிப்புக்கு பின் தான் வெளியில் பயணம், இயக்கத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழகம் முழுதும் ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள பஸ்களின் எண்ணிக்கை, அவற்றில் புதிய பஸ்கள் எவ்வளவு, காலாவதியாக பஸ்கள் எத்தனை, தொடர் பராமரிப்பு பணியில் உள்ள பஸ்கள் உள்ளிட்ட விபரங்களை ஆய்வு செய்து அறிக்கையாக அளிக்க போக்குவரத்து துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மண்டலத்தில் திருப்பூர் கிளை, 1 ல், 88 பஸ்கள், கிளை, 2ல், 57 பஸ்கள், பல்லடம் - 70, காங்கயம் - 80, தாராபுரம் - 76, பழநி, 1ல், 47, பழநி, 2ல், 37, உடுமலை - 94 என மொத்தம், 254 டவுன், 295 வெளியூர் என, 549 பஸ்கள் உள்ளன. இவற்றின் நிலை குறித்து விரைவில், போக்குவரத்து கழகத்துக்கு, திருப்பூர் போக்குவரத்து அதிகாரிகள் அறிக்கையளிக்க உள்ளனர்.