sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'தினமலர்' நாளிதழோடு எங்கள் பயணங்கள் முடிவதில்லை...

/

'தினமலர்' நாளிதழோடு எங்கள் பயணங்கள் முடிவதில்லை...

'தினமலர்' நாளிதழோடு எங்கள் பயணங்கள் முடிவதில்லை...

'தினமலர்' நாளிதழோடு எங்கள் பயணங்கள் முடிவதில்லை...


ADDED : செப் 07, 2024 12:33 AM

Google News

ADDED : செப் 07, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்றும், இன்றும், என்றும் தமிழக மக்களின் நாடித்துடிப்பை அறிந்து தினமலர் கோலோச்சி வருகிறது. அது, மழையாக இருந்தாலும், கடும் பனியாக இருந்தாலும் சரி, வீடு தோறும் தினமலர் நாளிதழை கொண்டு சேர்ப்பதில், ஏஜென்ட்கள், லைன் பாய்ஸ் உழைப்பு அளப்பரியது.

அதிலும், 73 ஆண்டு நிறைவு செய்துள்ள தினமலர் குறித்து தங்கள் அனுபவங்களை, ஏஜென்ட்கள், லைன் பாய்ஸ் ஆகியோர் பகிர்ந்து கொள்கின்றனர்.

--------

இன்றும் தனி 'மவுசு'தான்

கோவை பதிப்பு தொடங்கப்பட்டதில் இருந்து, எங்கள் குடும்பத்தினர்தான் தினமலர் ஏஜென்டாக இருந்து வருகிறோம். 'தினமலர்' நாளிதழ் செய்திக்கென தனி மதிப்பு உள்ளது. அதனால், மக்கள் விரும்பி வாங்குகின்றனர். 'சித்ரா... மித்ரா' மற்றும் அரசியல் செய்தி நன்றாக இருப்பதாக வாசகர்கள் தெரிவிக்கின்றனர். ஆன்மிகம், வாரமலருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது விற்பனை சிறப்பாக உள்ளது.

- வேலுசாமி, பெருமாநல்லுார்.

--------------------------------------

மதிப்பு தந்த 'தினமலர்'

கடந்த, 1994ம் ஆண்டு முதல் 'தினமலர்' நாளிதழுடன் பயணித்து வருகிறேன். மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெற்ற நாளிதழ். செய்திகளை வழங்குவதில் நேர்மையான நாளிதழ். இதனுடனான 30 ஆண்டுப் பயணம் மகிழ்ச்சியை தருகிறது. 'தினமலர்' நாளிதழை நேசித்து இதுவரை பணியாற்றி வருகிறேன். உயிரில் கலந்த ஒன்றாக மாறிவிட்டது. பொருளாதாரம், சமுதாயம் என, அனைத்து இடத்திலும் எனக்கு பெரிய மதிப்பு - மரியாதையை உருவாக்கியது தினமலர் தான். காலையில் நாளிதழ் வினியோகப்பணியை, நான் மட்டுமல்லாமல், எனது மனைவி உதவியோடு ஆத்மார்த்தமாக செய்து வருகிறோம். மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துகிறோம்.

- தாமோதரன், கரட்டாங்காடு,

திருப்பூர்.

--------------------------------------

செய்தியை சேர்ப்பதில் மகிழ்ச்சி

கடந்த, 20 ஆண்டுகளாக ஏஜென்டாக பணியாற்றி வருகிறேன். சமுதாயத்தில் நடக்கும் அனைத்து விதமான செய்திகளை, மக்களிடம் நாளிதழ் மூலம் கொண்டு சேர்ப்பதில் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. தினமலரின் துணிச்சலான பயணம் காரணமாக, இன்றைக்கும் மக்கள் தேடி, விரும்பி படிக்கும் நாளிதாழக உள்ளது. வெற்றி பயணம் இன்னும் தொடர வேண்டும். நாங்கள் பக்க பலமாக இருந்து, இந்த பணியை தொடருவோம்.

- மாணிக்கவாசகம், நியூ திருப்பூர்.

--------------------------------------

அங்கீகாரம் கொடுத்த 'தினமலர்'

தினமலர் 74வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதில், மகிழ்ச்சி. 20 ஆண்டுகளுக்கு மேலாக 'தினமலர்' நாளிதழ் குடும்பத்தில் பயணித்து வருவது நெகிழ்ச்சியாக உள்ளது. 1999ம் ஆண்டில் லைன் பாயாக ஆரம்பித்த எனது பயணம்; அடுத்தடுத்து தினமலரால் தான் எனது வளர்ச்சி ஏற்பட்டது.

பொருளாதார ரீதியாக பெரிய முன்னேற்றம் கிடைத்தது. இன்றைக்கு நல்ல சூழலில் வாழ்ந்து வருவதற்கு முக்கிய காரணம் 'தினமலர்' நாளிதழ் தான். எனது மகன்களும் இந்த பணியை எனக்கு உதவியாக மேற்கொண்டு வருகின்றனர். வாசகர்கள் மத்தியிலும், மற்ற நாளிதழ்களை காட்டிலும் 'தினமலர்' நாளிதழுக்கென தனிப்பெருமை உள்ளது. வரும் காலத்தில், 'தினமலர்' நாளிதழ் மேலும் வளர வேண்டும்.

- செல்வம், முத்து நகர், திருப்பூர்.

---------------------------------------

கடுமையாக உழைக்கத் தயார்

கடந்த, 1992ம் ஆண்டு முதல் 'தினமலர்' நாளிதழில் பயணித்து வருகிறேன். லைன் பாயில் ஆரம்பித்து, இன்றைக்கு ஏஜென்டாக களப்பணியாற்றி வருவது மகிழ்ச்சியாக உள்ளது. நாளிதழ் வளர்ச்சியில், நானும் பங்கெடுத்தது நெகிழ்ச்சியை உண்டாக்குகிறது. மென்மேலும் 'தினமலர்' நாளிதழ் வளர வேண்டும். அதற்காக கடுமையாக பணியாற்ற தயாராக உள்ளோம். 'தினமலர்' நாளிதழ் கொடுத்த வாய்ப்பும், ஊக்கமும் தான், இன்றைக்கு வெளியில் பெரிய மதிப்பு, மரியாதை அனைத்தும் கிடைத்துள்ளது. இதை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. நன்றிக் கடன் பட்டவனாக, உண்மை விசுவாசியாக என்றைக்கும் இருப்பேன்.

- கணேஷ்,வீரபாண்டி,

திருப்பூர்.

--------------------------------------

--------------------------------------

தனி கவுரவம் கிடைத்தது

கடந்த, 1980ல் இருந்து தினமலர் ஏஜென்ட் ஆக இருக்கிறேன். தினமலர் ஏஜென்ட் ஆக உள்ளதாலும் பல ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றுவதால் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் நன்கு மக்களிடையே அறிமுகம் கிடைத்துள்ளது. இதனாலேயே, ஏதாவது தகவல் என்றால் உடனடியாக முதலில் எனக்கு கிடைத்துவிடும்.

தற்போது தான் ஏரியா வாரியாக அனைத்து பத்திரிகைகளும் நிருபர்களை பணியமத்தியுள்ளனர். 1980 - 85 காலகட்டங்களில் ஏஜென்ட்களிடமிருந்து தான் செய்திகள் வாங்கப்பட்டது. எனக்கு கிடைத்த மரியாதையும் அங்கீகாரத்தையும் பார்த்து சுற்று வட்டார பகுதிகளில் பலர் ஏஜன்டாக பணிபுரிய முன் வந்தனர்.

- தண்டபாணி, சேவூர்,

--------------------------------------

விற்பனையில் முதல் இடம்

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தினமலர் நாளிதழ் ஏஜென்டாக உள்ளேன். தினமலரில் அனைத்து தரப்பு செய்திகளும் வெளியாவது வாசகர்களை கவர்கின்றது. செய்திகளால், தனிப்பட்ட வாசகர் வட்டாரத்தை தினமலர் கொண்டுள்ளது. நாளிதழ் விலை அதிகம் என்றாலும், தரமானதைத்தான் வாங்குகிறோம் என்ற நம்பிக்கை வாசகர்கள் மத்தியில் உள்ளது. இதன் காரணமாகவே இன்று வரை விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது. தினமலரின் சேவை நுாறாண்டு கடந்து மென்மேலும் தொடர வேண்டும்.

- பரமசிவம், பல்லடம்.

--------------------------------------

உள்ளூர் செய்திகள் அபாரம்

தினமலர் நாளிதழ் ஏஜென்டாக, கடந்த 35 ஆண்டு காலமாக, செயல்பட்டு வருகிறேன். எந்த அரசியல் கட்சிகள் சார்ந்தும் செல்லாமல், நடுநிலையுடன் செய்திகள் வெளியாவதால், தினமலருக்கு என தனிப்பட்ட வாசகர்கள் உள்ளனர். பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து துணிச்சலுடன் செய்தி வெளியிடுவதுடன், உள்ளூர் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது தினமலரின் தனிச்சிறப்பு. 70 ஆண்டுகள் கடந்த தினமலர் நாளிதழ், மேலும் வளர மனமார வாழ்த்துகிறேன்.

- ஜெயபால், வடுகபாளையம், பல்லடம்.

--------------------------------------

'குடும்பமாக' பயணம்

'தினமலர்' நாளிதழ் குடும்பத்தில், 50 ஆண்டுகள் வரை பயணித்து வருகிறோம். தாத்தா காலத்தில் ஆரம்பித்து இந்த பயணம், தந்தை மற்றும் தற்போது நானும், எனது சகோதரர் என, குடும்பமாக, மூன்று தலைமுறைகளாக பயணித்து வருகிறோம். எங்களின் பெரும் வளர்ச்சிக்கு 'தினமலர்' நாளிதழ் முக்கியமான ஒன்று. அன்று முதல் இன்று வரை, செய்திகள் வழங்குவதில் நேர்மையாகவும், நடுநிலையாகவும் இருக்கும் நாளிதழ். மக்கள் மத்தியில் இன்றும் இந்த பெயர் உள்ளது. 'தினமலர்' நாளிதழ், பெரியவர்கள் நட்பு, சமுதாயத்தில் மதிப்பு என, அனைத்தும் கொடுத்தது. இன்னும் மென்மேலும் 'தினமலர்' வளர வேண்டும்.

- மவுலிதரன், பொல்லிக்காளிபாளையம்,

திருப்பூர்.

-----------------------------------------

குடும்ப உறுப்பினர் 'தினமலர்'

நான் 25 ஆண்டாக ஏஜென்டாக இருக்கிறேன். தினமலர் நாளிதழுக்கென மதிப்பு உள்ளது. இங்குள்ள மக்களிடம் 'தினமலர்', குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாக உள்ளது. ரேஷன் கார்டில் மட்டும்தான் சேர்க்காமல் உள்ளனர். விளையாட்டு, ஆன்மிகம், அரசியல், வார மலருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை பேப்பரை மிஸ் செய்தாலும் மறுநாள் அதை வாங்கி படிக்கின்றனர். உள்ளுர் செய்தி அதிக அளவில் வருகிறது. அதை மக்கள் விரும்பி படிக்கின்றனர். நம் பேப்பருக்கென நிரந்தர வாசகர்கள் உள்ளனர். 'தினமலர்' நாளிதழ் துணையால், நான் சொந்த வீடு கட்டி நலமாக உள்ளேன்.

- செல்வராஜ், அனுப்பர்பாளையம்.






      Dinamalar
      Follow us