/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி பாசனத்தில் நெல் நடவு பசுமையாகிய பழைய ஆயக்கட்டு
/
அமராவதி பாசனத்தில் நெல் நடவு பசுமையாகிய பழைய ஆயக்கட்டு
அமராவதி பாசனத்தில் நெல் நடவு பசுமையாகிய பழைய ஆயக்கட்டு
அமராவதி பாசனத்தில் நெல் நடவு பசுமையாகிய பழைய ஆயக்கட்டு
ADDED : ஆக 29, 2024 12:19 AM

உடுமலை : அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், நெல் நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார் ஆகிய எட்டு ராஜவாய்க்கால் பாசனத்தில், 7,520 ஏக்கர் நிலங்களில், குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள, கடந்த ஜூன், 24ல் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனையடுத்து, நாற்றங்கால் முறை, நேரடி நெல் நடவு, பாய் நாற்றங்கால் முறை ஆகிய சாகுபடி முறைகளில், விவசாயிகள் நெல் நடவு மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகள் முழுவதும் பசுமையாக காணப்படுகிறது.