/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலக்காடு - ஈரோடு ரயில்; வழித்தடம் 2 நாள் மாற்றம்
/
பாலக்காடு - ஈரோடு ரயில்; வழித்தடம் 2 நாள் மாற்றம்
ADDED : ஏப் 07, 2024 12:24 AM
திருப்பூர்;பாலக்காட்டில் இருந்து கோவை, திருப்பூர் வழியாக ஈரோட்டுக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் வழித்தடம் இரு நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கோவை ரயில்வே ஸ்டேஷன் யார்டில் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், பாலக்காடு டவுன் - ஈரோடு பாசஞ்சர் ரயில் (எண்: 06818) போத்தனுாரில் இருந்து இருகூர் வழியாக வழியாக இயக்கப்படும். வரும், 8 மற்றும், 13 ம் தேதி, கோவை ஜங்ஷன், கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லுார் ஸ்டேஷன்களுக்கு பாசஞ்சர் செல்லாது.
பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு வரும் ரயில், போத்தனுாரில் இருந்து இருகூர், சூலுார், சோமனுார் வழியாக திருப்பூர் வந்து, ஈரோடு சென்றடையும், என சேலம் கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

