/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., - அமராவதி வாய்க்கால்கள் பரிதாபம்: ஓங்கிய 'குரல்கள்'
/
பி.ஏ.பி., - அமராவதி வாய்க்கால்கள் பரிதாபம்: ஓங்கிய 'குரல்கள்'
பி.ஏ.பி., - அமராவதி வாய்க்கால்கள் பரிதாபம்: ஓங்கிய 'குரல்கள்'
பி.ஏ.பி., - அமராவதி வாய்க்கால்கள் பரிதாபம்: ஓங்கிய 'குரல்கள்'
ADDED : ஜூன் 29, 2024 01:38 AM

திருப்பூர்;'டெல்டா பகுதிக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம், 4.25 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும் பி.ஏ.பி., திட்டத்துக்கு கிடைப்பதில்லை' என, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த, விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டம்( பி.ஏ.பி.,) தொடர்பாக, பல்வேறு விவசாயிகளும் பேசினர்.
கடைமடை வரை தண்ணீர் கிடைக்குமா?
* ஈஸ்வரமூர்த்தி, உழவர் உழைப்பாளர் கட்சி, மாவட்ட தலைவர்:
அமராவதி பழைய பாசன வாய்க்கால்கள் துார்மண்டியுள்ளன; செப்., மாதம் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால், வாய்க்கால்களை துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும். குடிமராமத்து திட்டம் போல், மொத்தமாக நிதி ஒதுக்கி, அனைத்து வாய்க்கால் பகுதிகளையும் சுத்தப்படுத்த வேண்டும். அப்போதுதான், கடைமடை பகுதி வரை தண்ணீர் கிடைக்கும்.
* கோபால், முன்னாள் தலைவர், பி.ஏ.பி., பகிர்மான குழு:
பி.ஏ.பி., 2வது மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன், வாய்க்கால்கள் துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும். குடிமராமத்து திட்டம் இருந்தவரை, வாய்க்கால்கள் நன்றாக இருந்தன. அத்திட்டத்தை வேறு பெயரிலாவது செயல்படுத்த வேண்டும். வேலை உறுதி திட்டத்தில் துார்வாருவதால் பயனிருக்காது. தமிழக அரசு, டெல்டா பகுதிக்கு வழங்கும் அங்கீகாரத்தை, 4.25 லட்சம் ஏக்கர் பாசன திட்டமான, பி.ஏ.பி.,க்கு அளிப்பதில்லை. இனியும் பாராமுகம் கூடாது; வாய்க்காலை பராமரிக்க வேண்டும்.
ஷட்டர் பழுது பார்க்க வேண்டும்
* வேலுசாமி, தலைவர், வெள்ளகோவில் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் சங்கம்:
பி.ஏ.பி., திட்டத்தை சீராக செயல்படுத்தினால் மட்டுமே, கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்கும். ஷட்டர்களை குறித்த இடைவெளியில் பழுதுபார்க்க வேண்டும். வாய்க்கால்களில் குப்பை கொட்டும் அட்டூழியத்தை தடுக்க, பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். மக்கள் பங்களிப்புடன் வேலி அமைக்க தயாராக இருப்பதால், மாவட்ட நிர்வாகம் அத்திட்டத்துக்கு உதவ வேண்டும். வாய்க்கால்களை முழுமையாக துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும்.
---
பொங்கலுார் பகுதியில் உள்ள பி.ஏ.பி., வாய்க்கால், சீமைக்கருவேல் மரங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன.