/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண்வளக் காவலர்களாக காகிதப்பைகள்
/
மண்வளக் காவலர்களாக காகிதப்பைகள்
ADDED : ஜூலை 12, 2024 12:32 AM
சுற்றுச்சூழல், வானிலை மாற்றம் சார்ந்த கவலை, மனித குலத்தை அதிகமாக தொற்றிக்கொண்டுள்ளது. குறிப்பாக, மண் வளத்தை மலடாக்கும் பாலிதீன் பைகளின் புழக்கம், சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.'மிக சுலபமாக பயன்படுத்துவதற்கும், நெகிழித்தன்மை நிறைந்தாக இருக்கும் நெகிழிப் பைகள், மண் வளத்தை மலடாக்கி வருகிறது' என்கின்றனர் விஞ்ஞானிகள். 'நெகிழிப் பைக்கு மாற்றாக, துணிப்பை, காகித பைகளை பயன்படுத்த வேண்டும்' என்ற விழிப்புணர்வும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.சிறிய பெட்டிக்கடை முதற்கொண்டு பெரிய, பெரிய ஷாப்பிங் மால்கள் வரை, நெகிழி பை பயன்பாடு பயன்பாட்டில் இருந்து வந்தாலும், காகித பைகளை பயன்படுத்தும் வியாபாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். பல்வேறு வடிவங்கள், வண்ணங்களில் காகித பைகளை தயாரித்து வழங்கும் நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கின்றன.காகித பைகள் பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி, ஆண்டுதோறும், ஜூலை, 12ம் தேதி உலக காகிதப்பை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:தினமும், டன் கணக்கில் சேகரிக்கப்படும் குப்பையில், காகிதப்பை உள்ளிட்ட காகிதம் சார்ந்த பொருட்களும் வருகின்றன. காகிதப்பை எளிதில் மக்கும் தன்மை கொண்டது; 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடியது. பாலிதீன் பைகளுடன் ஒப்பிடுகையில், காகித பைகள் விலங்குகளுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. பைகள் மக்கும் தன்மை கொண்டதால், உயிர் உரம் தயாரிக்கவும் உதவுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.- இன்று(ஜூலை 12) உலக காகித பை தினம்

