/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முடங்கிக் கிடக்கும் கோழி இன நோய் ஆராய்ச்சி மையம்

ADDED : ஏப் 28, 2024 01:37 AM

பல்லடம்;பல்லடம் அருகே, 11 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கோழி இன நோய் ஆராய்ச்சி மையம், பெயரளவுக்கு மட்டுமே செயல்பட்டு வருகிறது.
பல்லடம் வட்டாரப் பகுதியில் கறிக்கோழி உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. கோழிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதல் மற்றும் கோழி இனங்கள் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள வசதியாக, கடந்த, 2020ல், 11 கோடி ரூபாய் மதிப்பில் கோழி இன நோய் ஆராய்ச்சி மையம் மற்றும் நீர் பகுப்பாய்வகம் ஆகியவை பணிக்கம்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டது.
இந்த மையத்தில், கோழிகளுக்கு ஏற்படும் பல்வேறு வகையான நோய் தாக்குதல்களுக்கான காரணிகள், நீரின் தன்மை, சத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். இந்தியாவில், புனேவில் மட்டுமே உள்ள இந்த ஆராய்ச்சி மையம், பல்லடத்திலும் அமைக்கப்பட்டது.
30 பணியிடங்களுக்கு4 பேர் மட்டுமே...
பல கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்ட கோழி இன நோய் ஆராய்ச்சி மையம், நான்கு ஆண்டுகளாக போதிய செயல்பாடுகள் இன்றி முடங்கிக் கிடக்கிறது. ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான உதவி இயக்குனர்கள், மருத்துவர்கள், ஆய்வக உதவியாளர்கள் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.
ஆனால், 4 பேர் மட்டுமே இங்கு பணிபுரிகின்றனர். இதனால், கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டப்பட்ட ஆராய்ச்சி மையம் முடங்கி உள்ளது. இது உரிய முறையில் பயன்பாட்டுக்கு வந்தால்தான், கோழிகளை தாக்கும் பல்வேறு நோய்கள், பாதிப்புகளை தடுப்பதுடன் கறிக்கோழி உற்பத்தி தொழிலை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும்.
பல்லடம், ஏப். 28--
பல்லடம் அருகே, 11 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கோழி இன நோய் ஆராய்ச்சி மையம், பெயரளவுக்கு மட்டுமே செயல்பட்டு வருகிறது.
பல்லடம் வட்டாரப் பகுதியில் கறிக்கோழி உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. கோழிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதல் மற்றும் கோழி இனங்கள் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள வசதியாக, கடந்த, 2020ல், 11 கோடி ரூபாய் மதிப்பில் கோழி இன நோய் ஆராய்ச்சி மையம் மற்றும் நீர் பகுப்பாய்வகம் ஆகியவை பணிக்கம்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டது.
இந்த மையத்தில், கோழிகளுக்கு ஏற்படும் பல்வேறு வகையான நோய் தாக்குதல்களுக்கான காரணிகள், நீரின் தன்மை, சத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். இந்தியாவில், புனேவில் மட்டுமே உள்ள இந்த ஆராய்ச்சி மையம், பல்லடத்திலும் அமைக்கப்பட்டது.
30 பணியிடங்களுக்கு
4 பேர் மட்டுமே...
பல கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்ட கோழி இன நோய் ஆராய்ச்சி மையம், நான்கு ஆண்டுகளாக போதிய செயல்பாடுகள் இன்றி முடங்கிக் கிடக்கிறது. ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான உதவி இயக்குனர்கள், மருத்துவர்கள், ஆய்வக உதவியாளர்கள் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.
ஆனால், 4 பேர் மட்டுமே இங்கு பணிபுரிகின்றனர். இதனால், கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டப்பட்ட ஆராய்ச்சி மையம் முடங்கி உள்ளது. இது உரிய முறையில் பயன்பாட்டுக்கு வந்தால்தான், கோழிகளை தாக்கும் பல்வேறு நோய்கள், பாதிப்புகளை தடுப்பதுடன் கறிக்கோழி உற்பத்தி தொழிலை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும்.
-----
பல்லடத்தில், 11 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, முழுமையான பயன்பாட்டுக்கு கோழி இன ஆராய்ச்சி மையம் இன்னும் வரவில்லை. கட்டடத்தின் ஜன்னல்கள் உடைபட்டுள்ளன.