ADDED : ஏப் 04, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூரில், வாக்காளர்கள் எவ்வித அச்சம், மிரட்டலுக்கு ஆளாகாமல் சுதந்திரமாக ஓட்டு போட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய துணை ராணுவ படையினரின் கொடி அணி வகுப்பு நடந்தது.
லோக்சபா தேர்தல் அமைதியாக நடக்கவும், வாக்காளர்கள் எவ்வித அச்சம் மற்றும் மிரட்டலுக்கு ஆளாகாமல், சுதந்திரமாக ஓட்டுப்போட ஏற்பாடு செய்யும் வகையில், மத்திய துணை ராணுவ படையினர், தொழில் பாதுகாப்பு படையினர், போலீசார் பங்கேற்ற கொடி அணி வகுப்பு திருப்பூர் காங்கயம் ரோடு சி.டி.சி., கார்னரில் துவங்கி கரட்டாங்காடு, பெரிச்சிபாளையம் வழியாக தென்னம்பாளையத்தில் நிறைவு பெற்றது. போலீசார், ஊர்க்காவல் படையினர் அணி வகுத்து சென்றனர்.

