/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழைய கார்கள் நிறுத்தம்; குடியிருப்பில் இடையூறு
/
பழைய கார்கள் நிறுத்தம்; குடியிருப்பில் இடையூறு
ADDED : மார் 08, 2025 11:19 PM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 23வது வார்டு, நாராயணசாமி நகர் குடியிருப்பு பகுதிகளில், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்வகையில் பழைய கார்களை விற்பனைக்காக நிறுத்திவைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் தலைவர் காதர்பாஷா கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சி, 23 வது வார்டு, நாராயண சாமி நகரில், தனிநபர் ஒருவர், 12க்கும் மேற்பட்ட பழைய கார்களை ஆங்காங்கே நிறுத்திவைத்துள்ளார். குடியிருப்பு பகுதி வீடுகளுக்கு முன்பும், 40 அடி, 30 அடி ரோட்டிலும் கார்களை மாதக்கணக்கில் நிறுத்திவைத்துள்ளனர். இதனால், குடியிருப்பு பகுதிக்குள் கார்கள், சரக்கு வாகனங்கள் வந்து செல்லமுடியவில்லை.
பழை கார் விற்பனை என்கிற பெயரில், திருட்டு வாகனங்களையும் இங்கு நிறுத்தியிருக்க கூடும் என்கிற சந்தேகம் எழுகிறது. இதனால், அப்பாவி பொதுமக்கள் தேவையற்ற போலீஸ் விசாரணைக்குள் சிக்க நேரிடும்.
மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் நடவடிக்கை எடுத்து, பழைய கார்களை குடியிருப்பு பகுதியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.