/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சமுதாய வளைகாப்பு கர்ப்பிணிகள் பங்கேற்பு
/
சமுதாய வளைகாப்பு கர்ப்பிணிகள் பங்கேற்பு
ADDED : பிப் 24, 2025 09:45 PM

உடுமலை,; உடுமலை வட்டார அளவில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், 100 கர்ப்பிணிகள் பங்கேற்றனர்.
உடுமலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, நகராட்சி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தீபா வரவேற்றார். திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல குழுத்தலைவர் பத்மநாபன் விழாவை துவக்கி வைத்தார். பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி தலைமை வகித்தார்.
உடுமலை நகராட்சித்தலைவர் மத்தீன் முன்னிலை வகித்தார். உடுமலை வட்டாரத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள, 100 கர்ப்பிணிகளுக்கு, 13 வகையான பொருட்கள் சீர்வரிசை வழங்கப்பட்டு வளைகாப்பு நடந்தது.
விழாவில், உடுமலை எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் நெல்சன், தேஜஸ் ரோட்டரி சங்கம், லயன்ஸ் சங்கத்தினர் உட்பட பலரும் பங்கேற்றனர்.