/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலவச சிலம்ப பயிற்சி துவக்கம் பழங்குடியின மாணவர்கள் பங்கேற்பு
/
இலவச சிலம்ப பயிற்சி துவக்கம் பழங்குடியின மாணவர்கள் பங்கேற்பு
இலவச சிலம்ப பயிற்சி துவக்கம் பழங்குடியின மாணவர்கள் பங்கேற்பு
இலவச சிலம்ப பயிற்சி துவக்கம் பழங்குடியின மாணவர்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 16, 2024 01:58 AM

உடுமலை;உடுமலை பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில், மலைவாழ் மக்கள், மாணவர்களுக்கு இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது.
உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளியில், பழங்குடி இன மாணவர்கள் படிக்கின்றனர். அந்த மாணவர்களுக்கு இலவசமாக வாரம்தோறும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில், பகத்சிங் சிலம்ப களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில், இலவசமாக பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்காப்பாளர் புருேஷாத்தமன் தலைமை வகித்தார். தொடர்ந்து உடுமலையில் உள்ள பள்ளி மாணவியருக்கான அரசு விடுதியில் தங்கியுள்ள மாணவியருக்கும், இலவச சிலம்ப பயிற்சி துவக்கப்பட்டது.
விடுதிக்காப்பாளர் ேஹமா தலைமை வகித்தார். சிலம்ப ஆசான் வீரமணி பயிற்சிகளை அளித்தார்.