/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து பயணிகள் சிரமம்
/
வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து பயணிகள் சிரமம்
ADDED : மே 19, 2024 11:59 PM

அனுப்பர்பாளையம்:திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புது பஸ் ஸ்டாண்ட் வழியாக பெருமாநல்லுார், குன்னத்துார், நம்பியூர் மற்றும் வடக்கு பகுதியில் உள்ள ஊராட்சிகளுக்கு அதிக அளவில் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
டவுன் பஸ்கள் புது பஸ் ஸ்டாண்ட் உள்ளே செல்வதில்லை. பஸ் ஸ்டாண்ட் முன் பகுதியில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.
பஸ் ஸ்டாண்ட் முன் பகுதியில் இரு பக்கங்களிலும் பயணிகள் நிற்க நிழற்குடை வசதி இல்லை. பயணிகள் வெயிலிலும், மழையிலும், நின்று பஸ் ஏறி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மழை நேரங்களில் பயணிகள் பஸ் ஸ்டாண்ட் முன் நிற்கமுடியாததால், பஸ் ஸ்டாண்ட் உள் பகுதியில் உள்ள கடைகளில் நின்று கொண்டு, பஸ் வந்ததும் ஓடி வந்து ஏறுகின்றனர். முதியவர், குழந்தையுடன் வருபவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
இப்பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது. பஸ் ஸ்டாண்ட் இரு பக்கங்களிலும் போதிய இடவசதி உள்ளது. அந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க மாநகராட்சி அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

