/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கிடங்காக மாறிய பஸ் ஸ்டாண்ட் சுகாதார சீர்கேடால் பயணியர் புறக்கணிப்பு
/
குப்பை கிடங்காக மாறிய பஸ் ஸ்டாண்ட் சுகாதார சீர்கேடால் பயணியர் புறக்கணிப்பு
குப்பை கிடங்காக மாறிய பஸ் ஸ்டாண்ட் சுகாதார சீர்கேடால் பயணியர் புறக்கணிப்பு
குப்பை கிடங்காக மாறிய பஸ் ஸ்டாண்ட் சுகாதார சீர்கேடால் பயணியர் புறக்கணிப்பு
ADDED : ஆக 27, 2024 01:41 AM

உடுமலை;மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் குப்பை கொட்டும் மையமாக மாறி வருவதால், பயணியர் அதிருப்தியடைந்துள்ளனர்.
மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டிற்கு, சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் பழநி, தாராபுரம், உடுமலை, குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தினமும், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்லும் பஸ்ஸ்டாண்டில், அடிப்படை வசதிகள் இல்லை.
இதனால், பழநி, கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும், கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டு, பயணியரை ஏற்றி, இறக்கி விடுவதால், பிரதான ரோட்டில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகிறது.
பயணியர் நடை பாதை, கடைகளின் ஆக்கிரமிப்பால் குறுகலாகியுள்ளது. அதோடு, பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியில், கான்கிரீட் ஓடுதளத்தின் மேல், மடத்துக்குளம் சுற்றுப்பகுதிகளில் சேகரிக்கப்படும், குப்பை, கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டு, குப்பை கிடங்காக மாற்றப்பட்டுள்ளது. இதனால், துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பயணியர் பஸ் ஸ்டாண்டிற்குள் வர தயங்கும் நிலை உள்ளது. குப்பை கிடங்கு காரணமாக, தெரு நாய்கள் அதிகளவு சுற்றி வருவதோடு, பொதுமக்களை கடிக்கின்றன.
பஸ் ஸ்டாண்ட் குப்பை கிடங்கு காரணமாக, சுற்றிலும் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிவுகளை அகற்றி, அனைத்து பஸ்களும் வந்து செல்லவும், பஸ் ஸ்டாண்டை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.