/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹஜ் யாத்திரை பயணிகளுக்காக பாஸ்போர்ட் விண்ணப்ப முகாம்
/
ஹஜ் யாத்திரை பயணிகளுக்காக பாஸ்போர்ட் விண்ணப்ப முகாம்
ஹஜ் யாத்திரை பயணிகளுக்காக பாஸ்போர்ட் விண்ணப்ப முகாம்
ஹஜ் யாத்திரை பயணிகளுக்காக பாஸ்போர்ட் விண்ணப்ப முகாம்
ADDED : ஆக 19, 2024 11:57 PM

திருப்பூர்:மத்திய ஹஜ் கமிட்டி சார்பில் 2024-25ம் ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகள், பாஸ்போர்ட் பெற கடந்த 13 முதல் வரும் செப்., 9ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஹாஜிக்கள் ஒருங்கிணைந்த குழு, தாராபுரம் என்.வி.எம்., பொது நல அறக்கட்டளை (நபி வழி மன்றம்) ஆகியன இணைந்து பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான முகாமை, கோம்பை தோட்டம், ஆசாத் பள்ளி வளாகத்தில் நடத்தின. ஆசாத் பள்ளி தாளாளர் முகமது சிராஜுதீன் துவக்கி வைத்தார். மாவட்ட ஹாஜிகள் ஒருங்கிணைந்த குழு ஒருங்கிணைப்பாளர் சபியுல்லா வரவேற்றார். என்.வி.எம்., அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சையது ரியாஜ் தலைமை தாங்கினார்.
தலைவர் அல்பத்தாஹ், செயலாளர் முகமது இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விண்ணப்பதாரர்களிடம் விவரங்கள் பெற்று படிவம் பூர்த்தி செய்து, ஆவணங்கள் சரி பார்த்தும், கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேர்காணலுக்கான தேதி பதிவு செய்து வழங்கப்பட்டது. முகாமில் 105 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது.

