/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கிடங்காக மாறும் மேய்ச்சல் நிலங்கள்; கால்நடைகள் பாதிக்கும் அபாயம்?
/
குப்பை கிடங்காக மாறும் மேய்ச்சல் நிலங்கள்; கால்நடைகள் பாதிக்கும் அபாயம்?
குப்பை கிடங்காக மாறும் மேய்ச்சல் நிலங்கள்; கால்நடைகள் பாதிக்கும் அபாயம்?
குப்பை கிடங்காக மாறும் மேய்ச்சல் நிலங்கள்; கால்நடைகள் பாதிக்கும் அபாயம்?
ADDED : மே 01, 2024 11:26 PM

பல்லடம் : பல்லடம் வட்டாரத்தில், மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் குப்பை கிடங்குகளாக மாறி வருவதால், கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
விவசாயம், கால்நடை வளர்ப்பு, கறிக்கோழி உற்பத்தி ஆகியவை பல்லடம் வட்டாரத்தில் பிரதான தொழில்களாக உள்ளன. தீவன விலை உயர்வு, கட்டுப்படியாகாத பால் விலை, வறட்சி காரணமாக பசுந்தீவன பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால், கால்நடை வளர்ப்பு தொழில் சுருங்கி வருகிறது.
பெரும்பாலான விவசாயிகள், நஷ்டத்துக்காக ஏன் இதனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன், கால்நடை வளர்ப்பு தொழிலை கைவிட்டு வருகின்றனர். இருப்பினும், காலம் காலமாக இத்தொழிலை செய்து வரும் விவசாயிகள் பலர், கைவிட மனமின்றி கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கால்நடை வளர்ப்புக்கு மேய்ச்சல் என்பது விவசாயிகளுக்கு மிகவும் கை கொடுக்கிறது.
ஆனால், மேய்ச்சல் நிலங்களின் பரப்பு நாளுக்கு நாள் சுருங்கி வருகின்றன. நகரப்பகுதிகளில் மேய்ச்சல் நிலம் என்பதையே பார்க்க முடியாது என்ற சூழலில், கிராமப் பகுதியில் எஞ்சியுள்ள மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும், வறண்ட பூமியாக மாறி வருகிறது.
இதுதவிர, கிராமங்களில் சேகரமாகும் குப்பைகள், கழிவுகள் உள்ளிட்டவை கொட்டும் கிடங்குகளாக மேய்ச்சல் நிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு வீசப்படும் கழிவுகள், குப்பைகளுடன் உள்ள நெகிழிப் பைகள் காற்றில் பரவி மேய்ச்சல் நிலங்களை சூழ்கின்றன.
இதனால், மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடு மாடுகள் உள்ளிட்டவை, புற்களுக்குபதில் நெகிழிப் பைகளை உண்ணும் அவலம் ஏற்பட்டு வருகிறது. இது கால்நடைகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.
கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்தால், பால் உற்பத்தியும் குறையக்கூடும் என்பதால், மேய்ச்சல் நிலங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். இதற்காக, நெகிழிப்பை பயன்பாட்டை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.

