/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலம்பட்டி 'டோல்கேட்' பிரச்னை ;நாளை அமைதி பேச்சுவார்த்தை
/
வேலம்பட்டி 'டோல்கேட்' பிரச்னை ;நாளை அமைதி பேச்சுவார்த்தை
வேலம்பட்டி 'டோல்கேட்' பிரச்னை ;நாளை அமைதி பேச்சுவார்த்தை
வேலம்பட்டி 'டோல்கேட்' பிரச்னை ;நாளை அமைதி பேச்சுவார்த்தை
ADDED : ஜூலை 06, 2024 11:50 PM
திருப்பூர்;வேலம்பட்டி சுங்கச்சாவடிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், நாளை அமைதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என, சப் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரையிலான, தேசிய நெடுஞ்சாலையில், வேலம்பட்டி அருகே, சுங்கசாவடி அமைக்கப்பட்டுள்ளது. நீர்நிலையை ஆக்கிரமித்து, சுங்கச்சாவடி கட்டியுள்ளதாக, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கவில்லை என்றும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதற்காக, அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காணலாம் என, சப்-கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். வேலம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர். அதன்படி, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும், 8ம் தேதி, சப்-கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
ஆட்சேபனைதாரர்கள், திட்ட இயக்குனர், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பல்லடம் டி.எஸ்.பி., , 'நகாய்' மேலாளர், திருப்பூர் தெற்கு தாசில்தார், அவிநாசிபாளையம் இன்ஸ்பெக்டர், கோவை தேசிய நெடுஞ்சாலை செயற்பொறியாளர், மாநில நெடுஞ்சாலை செயற்பொறியாளர், பொங்கலுார் பி.டி.ஓ., ஆகியோர், வரும் 8 ம் தேதி (நாளை), சப் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டுமென, சப்- கலெக்டர் சவுமியா அழைப்பாணை அனுப்பியுள்ளார்.