/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவருக்கு தரமான கல்வி 'பெம்' பள்ளி பெருமிதம்
/
மாணவருக்கு தரமான கல்வி 'பெம்' பள்ளி பெருமிதம்
ADDED : பிப் 23, 2025 02:40 AM

திருப்பூர்: திருப்பூர், 'பெம்' பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:
திருப்பூர், காங்கயம் ரோட்டில், பெம் பள்ளி, 2009ல், துவங்கப்பட்டது. நேர்த்தியான திட்டமிடல், கடும் உழைப்பும் எங்கள் பள்ளி வளர்சிக்கு காரணம். அதனால் தான் கடந்தாண்டு, பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாவட்ட முதலிடம் பெற்றோம். ஆசிரியர்களின் சரியான திட்டமிடலுடன் கூடிய பயிற்றுவிப்பு முறையால், மாணவர்கள் தனித்துவத்துடன் விளங்குகின்றனர்.
நீட், ஜே.இ.இ., மற்றும் பவுண்டேஷன் வகுப்புகள், 6 முதல், 9ம் வகுப்பு வரை நடத்தப்படுகின்றன. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் நீட், ஜே.இ.இ., தொடர் வகுப்புகள் நடத்தப்படுகின்றன; அதற்குரிய தேர்வுகளும் முறைப்படி நடக்கின்றன.
ஆடை வடிவமைப்புப் பாடப்பிரிவு செயல்பட்டு வருகிறது. 'டெக்கி' அமைப்புடன் இணைந்து, கம்ப்யூட்டர் அறிவியல், டிசைனின் மற்றும் கோடிங் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள், தங்கள் வாழ்வியல் விழுமியங்களை அறிந்துகொள்ள 'ஸ்கூல் சினிமா' சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது.
சிறப்பான லேப் வசதிகள், ஏ.ஐ., தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ் பயிற்சியும் வழங்கப்படுகிறது.விளையாட்டு போட்டிகளிலும் மாணவர்கள் சிறக்கின்றனர். இயற்கை சூழலில், காற்றோட்டம் நிறைந்த கட்டமைப்புடன் உள்ள பள்ளியில், 2025 - 2026ம் ஆண்டிற்கான அட்மிஷன் நடைபெறுகிறது.

