/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அனுமதியின்றி இயங்கிய வாகனங்களுக்கு அபராதம்
/
அனுமதியின்றி இயங்கிய வாகனங்களுக்கு அபராதம்
ADDED : ஜூன் 25, 2024 12:45 AM
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி உதவி கமிஷனர் வினோத், மாநகர் நல அலுவலர் கவுரி சரவணன் ஆகியோர் தலைமையில், மாநகராட்சி சுகாதார பிரிவினர், அனுமதி பெறாமல் இயங்கும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்கள் குறித்து நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், உரிய அனுமதி பெறாத மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாட்டுக் கொட்டகை வளாகத்தில் கொண்டு சென்று நிறுத்தப்பட்டன.இவற்றுக்கு முதல் முறை என்பதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், உரிய உரிமம் பெற எச்சரிக்கப்பட்டது.
இரண்டாவது முறை பிடிபடும் வாகனங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் அதன் பின்னர் பிடிபடும் வாகனங்கள் தொடர்ந்து இயங்காத வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.