ADDED : டிச 09, 2024 07:20 AM
திருப்பூர் : பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஓய்வூதியருக்கு, 70 வயதுக்கு அதிகமாகும் போது, 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு திட்டத்தில், குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம், 7,850 ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும்.
போக்குவரத்து ஓய்வூதியருக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஓய்வூதியருக்கு, பணமில்லா மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் நாட்ராயன் தலைமை வகித்தார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தணிக்கையாளர் மகுடேஸ்வரன், போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்க மாநில உதவி பொதுசெயலாளர் செல்வராஜ், மாவட்ட தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் பேசினர்.