/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீர்வைத் தேடும் மக்கள்; அதிகாரிகளை நாடி மனுக்கள் காகிதப்பூ அல்ல... வெற்றியின் ஆயுதம்!

ADDED : ஆக 12, 2024 11:38 PM

பிரச்னைகள் இல்லாத இடம் ஏதும் இல்லை. தீர்வு கிடைத்துவிட்டால், பிரச்னைகள் குறித்த கவலை மாயமாகிவிடும். தங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கைதான், திங்கள்தோறும், கலெக்டர் அலுவலகத்தை நோக்கி மக்களை ஆர்வத்துடன் நகர வைக்கிறது.
'கலெக்டர் சாரையே பார்த்து மனு கொடுத்துட்டு வாரேன்...' என்று, நண்பரிடமோ, பக்கத்து வீட்டினரிடமோ... ஏன் ஊர் முழுக்கவோ கூறிவிட்டுப் புறப்படுவோர் பலர். நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை மட்டும் 492. இதில், எவ்வளவு மனுக்களுக்கு உடனடித் தீர்வு கிடைக்கப்போகிறதோ, தெரியாது. அதிகாரிகள் சொல்லும் கணக்கு வேறுவிதமாகக் கூட இருக்கலாம். ஆனாலும், இன்னும் மனுக்களுக்கென்று ஓர் உயிர்ப்புத்தன்மை இருக்கத்தான் செய்கிறது. சில சமயங்களில், உச்சநீதிமன்றத்தின் கதவுகளைக் கூடத் தட்டி, இவை நியாயம் கேட்டு, வெற்றி பெற்றிருக்கின்றன. இதுதானே, ஜனநாயகம்!
இதோ, நேற்று பெறப்பட்ட சில மனுக்கள், அதிகாரிகள் பார்வைக்கும், வாசகர் பார்வைக்கும்...