/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சட்டங்களை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்'
/
'சட்டங்களை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்'
ADDED : ஜூலை 25, 2024 12:10 AM

திருப்பூர் : 'புதிய சட்டங்களால் மாற்றங்கள் என்ன என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்,' என, அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
'புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்; விவசாயிகளின் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம், குமரன் சிலை முன் நேற்று நடந்தது. 'பெயர் புரியாத வகையில் சட்டங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளது.
புதிய சட்டங்கள், ஆகையால் மாற்றங்கள் என்ன என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.
முன்னதாக, எச்.எம்.எஸ்., மாநில நிர்வாகி முத்துசாமி தலைமை வகித்தார். எல்.பி.எப்., மாவட்ட துணை செயலாளர் முத்துசாமி, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் லோகு, எம்.எல்.எப்., தொழிற்சங்க நிர்வாகி சம்பத், மற்றும் சி.ஐ.டி.யு., ஐ.டி.என்.சி., நிர்வாகிகள் உட்பட, 80 பேர் பங்கேற்றனர்.

