/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடைவெளியின்றி மையத்தடுப்பு மறியலில் ஈடுபட மக்கள் முயற்சி
/
இடைவெளியின்றி மையத்தடுப்பு மறியலில் ஈடுபட மக்கள் முயற்சி
இடைவெளியின்றி மையத்தடுப்பு மறியலில் ஈடுபட மக்கள் முயற்சி
இடைவெளியின்றி மையத்தடுப்பு மறியலில் ஈடுபட மக்கள் முயற்சி
ADDED : ஜூலை 05, 2024 11:33 PM

பல்லடம்:பல்லடம் -- வெள்ளகோவில் வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. விரிவாக்க பணி நிறைவடைந்த பகுதிகளில், மைய தடுப்பு அமைக்கும் பணி துவங்கியுள்ளது. மாதப்பூர் - பல்லடம் வரை மைய தடுப்பு அமைக்கப்பட்டு வரும் நிலையில், இடைவெளியின்றி மைய தடுப்பு அமைப்பதாக கூறி, பனப்பாளையம் பகுதி கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
தாராபுரம் ரோடு பிரிவில் இருந்து சமத்துவபுரம் வரை, 2 கி.மீ., துாரத்துக்கு இடைவெளியின்றி மையத்தடுப்பு அமைக்கப்படுகிறது. கறிக்கோழி பண்ணை வேன்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் எடுத்துச் செல்ல வரும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் அரசி ஆலை லாரிகள் அதிக செல்கின்றன.
இவ்வாறு வரும் வாகனங்கள், சமத்துவபுரம் சென்று திரும்பி வரவேண்டிய நிலை உள்ளது. இதனால், தேவையற்ற பொருட்செலவு, கால விரயம் ஏற்படுகிறது. இடைவெளி விட போலீசார் மறுப்பு தெரிவிக்கின்றனர். இடைவெளி விட்டு மைய தடுப்பு அமைக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
இது குறித்து டி.எஸ்.பி., விஜிகுமாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேசிய பின் உரிய நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி., கூறியதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
----
பல்லடம் அருகே என்.எச்., ரோட்டில், இடைவெளியின்றி மையத்தடுப்பு அமைக்கப்படுவதாக கூறி மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள்.