/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுப்ரீம் கோர்ட்டில் 'மக்கள் நீதிமன்றம்'
/
சுப்ரீம் கோர்ட்டில் 'மக்கள் நீதிமன்றம்'
ADDED : ஜூலை 04, 2024 09:50 PM
திருப்பூர்:சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்ற நிகழ்வு மூலம் தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும், 27ம் தேதி முதல் ஆக., 3ம் தேதி வரை லோக் அதாலத் நடைபெறும். இதில் வழக்கு தொடர்பான இரு தரப்பினர் மற்றும் வக்கீல்கள் நேரிலோ, காணொளி வாயிலாகவோ பங்கேற்கலாம்.
இதன் சிறப்பு அம்சங்கள், வழக்கில் சமரச முறையில் தீர்வு; இறுதி மற்றும் செயல்படுத்துவதற்காக உடனடி உத்தரவு; குறைந்த செலவில் தீர்வு மற்றும் கோர்ட் முத்திரைக் கட்டணம் திரும்ப பெறும் வசதி ஆகியன உள்ளன.
எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருப்பினும் தங்கள் பகுதி வட்ட அல்லது மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவை அணுகி விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை https://www.sci.gov.in என்ற இணைய தள முகவரியில் பெறலாம். தொடர்பு கொள்ள, special.lokadalat@sci.nic.in என்ற இ -மெயில் முகவரியை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.