/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழனி மாவட்டத்தில் உடுமலை இணைக்க மக்கள் பாதுகாப்பு இயக்கம் எதிர்ப்பு

ADDED : மார் 06, 2025 01:41 AM

உடுமலை:'பழனி மாவட்டத்துடன் உடுமலை, மடத்துக்குளம் பகுதியை இணைக்கக் கூடாது; உடுமலையை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்க வேண்டும்' என, மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
உடுமலை பகுதியிலுள்ள சேவை அமைப்புகள் இணைந்து உடுமலை, மடத்துக்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் கூட்டம், உடுமலை வியாபாரிகள் சங்க கட்டடத்தில் நேற்று மாலை நடந்தது.
இதில், திண்டுக்கல் மாவட்டம், பழனி, ஒட்டன்சத்திரம் தொகுதிகள், திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளை இணைத்து, புதிதாக பழனி மாவட்டம் உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
நிர்வாகம் மற்றும் கலாசார ரீதியாக, மண்டலங்கள் மாறும் போது சிக்கல் ஏற்படும். கோவை மண்டலத்தில், பல நுாறு ஆண்டுகளாக உள்ள பகுதியை, மதுரை மண்டலத்துடன் இணைக்கக்கூடாது. உடுமலையை தலைமையிடமாக வைத்து, சுற்றுப்பகுதிகளை இணைக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து, அரசுக்கு மனு அளிப்பது, பல்வேறு போராட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.