ADDED : ஜூலை 13, 2026 09:11 PM
அ நிறம் | அளவு
தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, 15 வேலம்பாளையம் நகர மா.கம்யூ கட்சி சார்பில், மனு கொடுக்கும் போராட்டம் மாநகராட்சி முதலாம் மண்டல அலுவலகம் முன் நடைபெற்றது.
நகர செயலாளர் நந்தகோபால் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ் பேசினர். மாநகராட்சியின் அனைத்து எல்லா வார்டுகளிலும் குழந்தைகள், பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை கட்டுபடுத்த வேண்டும், கருப்பராயன் கோவில் வீதியில் பழுதடைந்த சாக்கடை கால்வாயை புதுப்பிக்க வேண்டும், என்பது உட்பட பல்வேறு பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி, உதவி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.
