/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுப் பையா பள்ளியில் புகைப்பட போட்டி
/
சுப் பையா பள்ளியில் புகைப்பட போட்டி
ADDED : ஆக 18, 2024 12:27 AM

திருப்பூர்;சகோதயா சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான புகைப்பட போட்டி மற்றும் கண்காட்சி, காலேஜ் ரோட்டில் உள்ள சுப்பையா சென்ட்ரல் பள்ளியில் நேற்று நடந்தது.
இதில், 16 பள்ளிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக ரோட்டரி அனந்தராம் பங்கேற்றார். சிறந்த போட்டோவை தேர்வு செய்யும் நடுவர்களாக ரவீந்திரன் மற்றும் ரமா ஆகியோர் பங்கேற்றனர்.
பள்ளி தாளாளர் சுகுமாரன், பள்ளி முதல்வர் ஆரோக்கிய ஜெரால்ட் வரவேற்றனர். சிறந்த போட்டோக்களை தேர்வு செய்து, மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். பள்ளி நிர்வாக ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி நன்றி கூறினார்.
வாகை சூடியவர்கள்
ஆறாம், ஏழாம் வகுப்பு பிரிவில், ஸ்ரீ நாச்சம்மாள் வித்யா வாணி சாய் பிரணவ் முதலிடம், தர்ஷன்யா மூன்றாமிடம், தி ஆப்டிமஸ் பப்ளிக் பள்ளி ஸ்ரீ வர்ஷன் இரண்டாமிடம் பிடித்தனர்.
சிறப்பு பரிசு எஸ்.வி., சென்ட்ரல் பள்ளி ஜோபினா கோயல். எட்டாம், ஒன்பதாம் வகுப்பு பிரிவில், அத்வைதா பள்ளி சவுமியா ஹரிணி முதலிடம், ஸ்பிரிங் மவுன்ட் பள்ளி மார்ஜூக் ரிசான் இரண்டாமிடம், சர்வின் மூன்றாமிடம் மற்றும் சிறப்பு பரிசு நாச்சம்மாள் வித்யவாணி ஸ்வந்த்.
பத்தாம் வகுப்பு முதல், பிளஸ்2 வரை பிரிவில், தி ஆப்டிமஸ் பப்ளிக் பள்ளி ஹனிஷா முதலிடம், ஜெயநாத் இரண்டாமிடம், நாச்சம்மாள் வித்யவாணி அபிநந்த் மூன்றாமிடம் மற்றும் சிறப்பு பரிசு பெம் பள்ளி முகமத் எலியாஸ்.

