/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடநெருக்கடி; கர்ப்பிணிகள், பொதுமக்கள் பாதிப்பு
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடநெருக்கடி; கர்ப்பிணிகள், பொதுமக்கள் பாதிப்பு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடநெருக்கடி; கர்ப்பிணிகள், பொதுமக்கள் பாதிப்பு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடநெருக்கடி; கர்ப்பிணிகள், பொதுமக்கள் பாதிப்பு
ADDED : ஆக 07, 2024 10:55 PM
உடுமலை : உடுமலை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில், இடநெருக்கடியால் சிகிச்சைக்கு வருவோர் பாதிக்கப்படுகின்றனர்.
உடுமலை நகரப்பகுதிக்கான ஆரம்ப சுகாதார நிலையத்தில், நாள்தோறும் நுாற்றுக்கணக்கான உடல் நல குறைபாடுள்ளவர்கள், அடிப்படை சிகிச்சை பெறுவதற்கு வருகின்றனர்.
கடந்தாண்டு, தேசிய தர உறுதி திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை, தரமான சுகாதாரம், முறையான பராமரிப்பு அடிப்படையில் மாநில அளவில், இந்த சுகாதார மையத்துக்கு தேசிய தர உறுதிச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ சேவையில் மேம்பட்டு வரும் இங்கு, இடநெருக்கடி தொடர் பிரச்னையாக இருக்கிறது.
இங்கு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில், கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை, பரிசோதனைகளும் நடக்கிறது. இந்த நாட்களில், மற்ற நோயாளிகளும் சுகாதார நிலையத்துக்கு வருவதற்கு தடையில்லை.
இந்த நாட்களில், சுகாதார நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். பதிவு முதல், சர்க்கரை, ரத்த அழுத்தம், எடை, உயர்வு பரிசோதனைகள் உட்பட அனைத்து செயல்பாடுகளுக்கும் நீண்ட நேரமாகிறது. டோக்கன் பதிவு உட்பட அனைத்துக்குமே, வரிசைப்படி கர்ப்பிணிகள் காத்திருக்க வேண்டும்.ஆனால், அதற்கான இடவசதி இங்கு இல்லை. காய்ச்சல், சளி, இருமல் என பல தொற்றுகளுடன் நோயாளிகள் இங்கு வருகின்றனர்.
அவர்களும், பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களும் ஒன்றாக காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இடவசதி இல்லாததால், இப்பிரச்னை கூடுதல் சிரமத்தை ஏற்படுகிறது. கர்ப்பிணிகள் காத்திருக்க இடமில்லாமல் அங்குமிங்குமாய் அலைமோதுகின்றனர்.
தேசிய அளவில் தர நிர்ணயம் பெற்ற சுகாதார நிலையத்தில், இடநெருக்கடி பிரச்னைக்கு தீர்வில்லாமல் சிகிச்சை பெற வருவோர் சிரமப்படுவதை நகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை என பல துறைகளும் கண்டும் காணாமல் அலட்சியமாக செயல்படுகிறது.