நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மறைந்த முன்னாள் தலைவர் என்.எஸ்.பழனிசாமிக்கு பொங்கலுார், நாதகவுண்டம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் திறப்புவிழா வரும் 18-ல் நடக்கிறது.
திறப்பு விழாவில் பங்கேற்க அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி சம்மதித்துள்ளார். கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான ஆனைமலையாறு -- நல்லாறு திட்டம் நிறைவேற்றக் கோரியும், அதன் முக்கியத்துவம் குறித்தும் விவசாயிகள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியவர் என்.எஸ்.பழனிசாமி. இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் ஊர் தோறும் பெயர் பலகை திறந்தும், தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்தும் வருகின்றனர். மணிமண்டபம் திறப்பு விழாவுக்கு வரும் பழனிசாமியிடம் இத்திட்டத்திற்கான ஆதரவைக் கோர திட்டமிட்டுள்ளனர்.

