/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை 2030ம் ஆண்டுக்குள் அதிகரிக்க திட்டம்
/
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை 2030ம் ஆண்டுக்குள் அதிகரிக்க திட்டம்
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை 2030ம் ஆண்டுக்குள் அதிகரிக்க திட்டம்
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை 2030ம் ஆண்டுக்குள் அதிகரிக்க திட்டம்
ADDED : மார் 02, 2025 04:50 AM
திருப்பூர்: உலகளவில் மாற்று திறனாளிகளுக்கான உரிமைகளை அதிகரிக்கும் வகையிலான திட்டங்கள் குறித்து, சர்வதேச அளவிலான மாற்று திறனாளிகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
திருப்பூரைச் சேர்ந்தவர் லலித்குமார் நடராஜன். 'லவ் அண் அசெப்டென்ஸ்' என்ற பெயரில் மாற்று திறனாளிகளுக்கான அறக்கட்டளை நடத்தி வருகிறார். கடந்த மாதம் ஆசிய அளவில் மாற்று திறனாளிகள் நிலை குறித்த மாநாடு, தாய்லாந்தில் இரு நாட்கள் நடந்தது. இதில், லலித்குமார் பங்கேற்று பேசினார்.
மாநாடு குறித்து அவர் கூறியதாவது:
இந்நிகழ்வு, 'ஏசியன்' மற்றும் ஐ.டி.ஏ., ஆகிய சர்வதேச அமைப்புகள் ஏற்பாடு செய்து இரு நாட்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் மாற்று திறனாளிகள் அமைப்பினர் கலந்து கொண்டனர். யுனிசெப், கோய்கா, யுகேஎய்ட், ஜெர்மன் கார்பரேசன், 'இன்க்ளுசிவ் பியுச்சர்ஸ்' ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின.
இதில் சர்வதேச அளவில் மாற்றுதிறனாளிகள் நலன் குறித்து பல்வேறு தலைப்பில் விவாதங்கள் முன் வைக்கப்பட்டன. மாற்று திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்கள் கல்வி மற்றும் திறன் வளர்ப்பு; வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வரும் 2030 ம் ஆண்டு வரையிலான மாற்று திறனாளிகள் உரிமைகள் குறித்து பிராந்திய அளவிலான திட்டங்கள்; கம்போடியா, சீனா மற்றும் வியட்நாம் நாடுகள் மாற்று திறனாளிகள் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தியுள்ள உத்திகள் குறித்து விளக்கப்பட்டது.
'வெபினார்' வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல்; அனைத்து துறைகளிலும் மாற்று திறனாளிகள் பங்களிப்பை உறுதிப் படுத்துதல் ஆகியன குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.
நீடித்த கொள்கை ஒருங்கிணைப்பு, உலகளாவிய ஒத்துழைப்பு, திறன் உரிமைகளுக்கான தேவைகளை வலுப்படுத்துதல் போன்றவற்றில் பங்களிப்பாளர்களை ஈடுபடுத்துதல்; உலகளவில் 15 சதவீதம் நிதியை மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் இம்மாநாடு மூலம் உலக நாடுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.