sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ெஷரீப் காலனியில் 150 மரக்கன்று நடவு

/

ெஷரீப் காலனியில் 150 மரக்கன்று நடவு

ெஷரீப் காலனியில் 150 மரக்கன்று நடவு

ெஷரீப் காலனியில் 150 மரக்கன்று நடவு


ADDED : ஆக 04, 2024 05:18 AM

Google News

ADDED : ஆக 04, 2024 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், ெஷரீப் காலனி அருகே உள்ள பொது இடத்தில், 150 மரக்கன்றுகள் நேற்று நட்டு வைக்கப்பட்டது.

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், காங்கயம் - துளிகள், வெள்ளகோவில் - நிழல்கள், திருப்பூர் -வேர்கள், 'டிரீம் -20' பசுமை அமைப்பு என, பல்வேறு பசுமை அமைப்புகளுடன் கரம் கோர்த்து, பசுமைப்பணியை ஊக்குவித்து வருகிறது. 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், விவசாயிகள் தங்கள் நிலத்தில் இலவசமாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில், 18 லட்சம் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டு புதிய மரக்கன்று நடவு பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், திருப்பூர் ெஷரீப் காலனி அருகே, பொது இடத்தில் நேற்று மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ் கிளப் சார்பில், அதன் தலைவர் சண்முகம், முன்னாள் மாவட்ட கவர்னர் ராதாகிருஷ்ணன், செயலாளர் அருண்பிரபு, பொருளாளர் தாசன் உள்ளிட்டோர் மரக்கன்று நடவு பணியை துவக்கி வைத்தனர். புங்கன், வேம்பு, நாவல், தான்றி, பூவரசு, இயல்வாகை மரக்கன்றுகள் தலா, 20; மந்தாரை, சொர்க்கம், இலுப்பை மரக்கன்றுகள் தலா, 10 என, 150 மரக்கன்றுகள் நடப்பட்டது.

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us