/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாயப்பட்டறையில் சந்தன மணம் வீசும் வனத்துக்குள் திருப்பூர் -10ல் மரக்கன்று நடவு
/
சாயப்பட்டறையில் சந்தன மணம் வீசும் வனத்துக்குள் திருப்பூர் -10ல் மரக்கன்று நடவு
சாயப்பட்டறையில் சந்தன மணம் வீசும் வனத்துக்குள் திருப்பூர் -10ல் மரக்கன்று நடவு
சாயப்பட்டறையில் சந்தன மணம் வீசும் வனத்துக்குள் திருப்பூர் -10ல் மரக்கன்று நடவு
ADDED : செப் 09, 2024 02:06 AM

உடுமலை:வனத்துக்குள் திருப்பூர்-10 திட்டத்தின் கீழ், உடுமலை பகுதிகளில், 82,568 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், வனத்துக்குள் திருப்பூர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பாண்டு, 10வது திட்டத்தின் கீழ், 3 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயித்து, கடந்த, மார்ச் பணி துவங்கியது.
மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை, ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து, 162 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இதில், உடுமலை பகுதியிலுள்ள விவசாயிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், பசுமை ஆர்வலர்களின் ஆர்வம் காரணமாக, 78 இடங்களில், 82,568 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில், அதிகளவு மரக்கன்றுகள் உடுமலை பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று, உடுமலை அமராவதி நகர், சாயப்பட்டறை பகுதியில், விவசாயி கிருஷ்ணசாமிக்கு சொந்தமான நிலத்தில், 300 சந்தன மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
அதே போல், மடத்துக்குளம், முள்ளங்கி வலசு கிராமத்தில், விவசாயி திருமலைசாமிக்கு சொந்தமான நிலத்தில், 150 தேக்கு, 125 மகா கனி என, 275 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த நிலங்களில், பாதுகாப்பு வேலி மற்றும் சொட்டு நீர் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது.
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வருவாய் அளிக்கும் வகையில், மரச்சாகுபடி திட்டமாக விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.
மேலும், கோவில், பள்ளி, கல்லுாரி வளாகங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலை வளாகங்களில், இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது.
மரக்கன்றுகள் நடவு செய்து, மரமாக வளர்த்து பசுமை பரப்பு அதிகரிக்கும் பணியில் ஆர்வம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்டக்குழுவினர் தெரிவித்தனர்.