/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அட்சய திருதியை நாளில் மரக்கன்றுகள் நடவு
/
அட்சய திருதியை நாளில் மரக்கன்றுகள் நடவு
ADDED : மே 11, 2024 12:35 AM
பல்லடம்;பல்லடம் அருகே, அட்சய திருதியை முன்னிட்டு, மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
பல்லடம் அருகே, கரைப்புதுார் கிராமத்துக்கு உட்பட்ட குன்னாங்கல்பாளையம், சிவன்மலை ஆண்டவர் நகரில், பசுமையை காக்கும் முயற்சியாக, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஊர் பொதுமக்கள் சார்பில் நடந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'கோடை வெப்பம் காரணமாக, கடுமையாக அவதிப்பட்டு வருகிறோம். மரம் வளர்ப்பை ஊக்குவித்தால் மட்டுமே இதிலிருந்து தப்பிக்க முடியும். அட்சய திருதியை நாளான இன்று (நேற்று) எதனை வைத்து வழிபடுகிறோமோ அது பல மடங்கு பெருகும் என்று கூறுவார்கள். இதன் அடிப்படையில், இன்று வேம்பு, புங்கன், நீர் மருது, வாகை, தான்றி உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டோம்,' என்றனர்.