/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமையாகும் தீயணைப்பு நிலைய வளாகம் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நடவு
/
பசுமையாகும் தீயணைப்பு நிலைய வளாகம் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நடவு
பசுமையாகும் தீயணைப்பு நிலைய வளாகம் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நடவு
பசுமையாகும் தீயணைப்பு நிலைய வளாகம் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நடவு
ADDED : ஆக 19, 2024 01:21 AM

உடுமலை;உடுமலை தீயணைப்பு நிலைய வளாகத்தில், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், 700 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வளாகத்தில், பழைய குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டிருந்தது. அந்த பகுதியை பசுமையாக்கும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், நிலம் சமன் செய்யப்பட்டு, குழிகள் எடுக்கப்பட்டது.
இங்கு, மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமை வகித்தார். தீயணைப்பு வீரர்கள் மற்றும் திட்ட குழுவினர் பங்கேற்றனர்.
இங்கு, நாவல், புளி, கொய்யா, மாதுளை, சந்தனம், சொர்க்கம், சிசு, குமிழ், புங்கன், இலுப்பை, அயல்வாகை, மந்தாரை, பூவரசன், நீர் மருது, துாங்குவாகை, சிசு என, 700 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
மண்ணின் மரபு சார்ந்த மரக்கன்றுகளும், பறவைகள் மற்றும் பல்லுயிரினங்களுக்கு பயன் அளிக்கும் வகையிலும், தீயணைப்பு நிலைய வளாகம் பசுமையாக மாற்றும் வகையில், நடவு செய்யப்பட்டுள்ளது. அதே போல், பூளவாடி விவசாயி கார்த்திக்கு சொந்தமான விவசாய நிலத்தில், 500 மகா கனி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. சுங்கார முடக்கு விவசாயி பிரசாந்திற்கு சொந்தமான விவசாய நிலத்தில், 200 சந்தன மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
சந்தன மரங்கள், வளர்ந்து பல கோடி ரூபாய் வருவாய் கொடுக்கும் வகையில், பலன் அளிக்கும் என்பதால், தற்போது விவசாயிகள் சந்தன மரம் வளர்ப்பிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், விவசாய நிலங்களில் மரச்சாகுபடி திட்டமாகவும், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரி, கோவில் நிலங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான பூங்கா, நீர் நிலைகளில் பசுமை பணியாக, இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடவு செய்து, மரங்களாகும் வரை பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்தனர்.