/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி கோவில் வளாகத்தில் நெகிழிக்கழிவு சேகரிப்பு
/
அவிநாசி கோவில் வளாகத்தில் நெகிழிக்கழிவு சேகரிப்பு
ADDED : பிப் 23, 2025 02:33 AM

அவிநாசி: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஹிந்து அறநிலையத்துறை, அவிநாசி பேரூராட்சி நிர்வாகம், அவிநாசி அரசு கல்லுாரி மாணவர்கள், கே.பி.ஆர்., குழுமம் மற்றும் பசுமை தோழன் திருப்பூர் ஆகிய அமைப்பினர் இணைந்து மாபெரும் நெகிழி கழிவு சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 250 கிலோ நெகிழி கழிவுகளை சேகரித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி ஒழிப்பு பற்றிய உறுதிமொழி எடுத்து கொண்டனர். திருப்பூர் மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் டாக்டர் ரமேஷ், பேசினார். உதவி பொறியாளர் சங்கரநாராயணன், பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், கோவில் செயல் அலுவலர் சபரிஷ்குமார்,அறங்காவலர்கள் பொன்னுசாமி, விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி, அரசு கல்லூரி மாணவர்கள், கே.பி.ஆர்., குழும பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

