/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி, வழிபாடு தலங்களில் இன்று நெகிழிக்கழிவு அகற்றம்
/
பள்ளி, வழிபாடு தலங்களில் இன்று நெகிழிக்கழிவு அகற்றம்
பள்ளி, வழிபாடு தலங்களில் இன்று நெகிழிக்கழிவு அகற்றம்
பள்ளி, வழிபாடு தலங்களில் இன்று நெகிழிக்கழிவு அகற்றம்
ADDED : பிப் 22, 2025 07:03 AM
திருப்பூர்; மண் வளத்துக்கு கேடு விளைவிக்கும் நெகிழி(பாலிதீன்) பயன்பாடுகளை குறைக்கும் வகையில், ஒவ்வொரு மாதமும், கடைசி சனிக்கிழமைகளில் நெகிழி கழிவு சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது.
கடந்த மாதம் குடியிருப்புகள் மற்றும் நீர்நிலைகளை சுற்றியுள்ள பகுதிகளில், மாசுகட்டுப்பாடு வாரியம், வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணியில் மொத்தம், 2,161 தன்னார்வலர்கள் பங்கேற்று, 2,826 கிலோ எடையுள்ள நெகிழி கழிவுகளை சேகரித்து, அகற்றினர்.
இன்று (22ம் தேதி), அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் தங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகள், அவற்றைச் சுற்றியுள்ள இடங்களிலும் முகாம் நடைபெற உள்ளது.
அவிநாசிலிங்கேஸ்வரர், சிவன்மலை முருகன், சர்க்கார் பெரியபாளையம், சுக்ரீஸ்வரர், பல்லடம் பொன்காளியம்மன் கோவில், அங்காளம்மன், முத்துகுமார சுவாமி கோவில் ஆகிய இடங்களில் சுத்தம் செய்யும் பணி நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் தன்னார்வலர்கள் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

