/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'காலாவதி உணவுப்பொருள் விற்றால் தகவல் கொடுங்கள்'
/
'காலாவதி உணவுப்பொருள் விற்றால் தகவல் கொடுங்கள்'
ADDED : பிப் 25, 2025 06:50 AM

பல்லடம்; பல்லடத்தில், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி முகாம், பல்லடம் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நடந்தது. பல்லடம் வட்ட வழங்கல் அலுவலர் பாலவிக்னேஷ் தலைமை வகித்தார்.
பி.டி.ஓ., பானுப்பிரியா வரவேற்றார்.
பல்லடம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
பேக்கிங் செய்யப்பட்ட ஒரு உணவுப் பொருளில் உள்ள குறியீட்டை பார்த்தாலே அது சைவம், அசைவம் என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம். அடுத்து, உணவின் பெயர், அதிலுள்ள சேர்க்கைகள் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
இத்துடன், ஊட்டச்சத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். உணவுப் பொருட்களை வாங்கும் போதே அதன் தயாரிப்பு, காலாவதி தேதி ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். கலப்படம் செய்யப்பட்ட, காலாவதியான, கெட்டுப்போன உணவு பொருட்கள் விற்பனை செய்வது உணவுப் பொருள் பாதுகாப்பு சட்டத்தின்படி தவறானது.
எனவே, இதுபோன்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து, தாராளமாக உணவுப்பொருள் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், இது, ஒரு நுகர்வோராக நம்ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக, தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி, உதவி திட்ட அலுவலர்கள் கவுதம், பாஸ்கரன் மற்றும் ஆர்.ஐ., ஜெயந்தி உள்ளிட்டோர் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து சிறப்புரை ஆற்றினர்.