sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அக்., 29 முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வாக்காளரை தேடிச் செல்லும் பி.எல்.ஓ.,க்கள்

/

அக்., 29 முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வாக்காளரை தேடிச் செல்லும் பி.எல்.ஓ.,க்கள்

அக்., 29 முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வாக்காளரை தேடிச் செல்லும் பி.எல்.ஓ.,க்கள்

அக்., 29 முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வாக்காளரை தேடிச் செல்லும் பி.எல்.ஓ.,க்கள்


ADDED : ஆக 21, 2024 01:19 AM

Google News

ADDED : ஆக 21, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;வரும் அக்., 29ல், வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, சுருக்கமுறை திருத்தம் துவங்கப்படுகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும், முன்திருத்த பணிகள் நேற்றுமுதல் துவங்கியுள்ளன.

ஆண்டுதோறும் ஜன., 1ம் தேதியை தகுதிநாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில், வரும் 2025 ஜன., 1ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளரை பட்டியலில் இணைப்பதற்கான சுருக்கமுறை திருத்தம் - 2025, வரும் அக்., 29 ல் துவங்க உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, உடுமலை, தாராபுரம், அவிநாசி, காங்கயம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. லோக்சபா தேர்தலுக்கு முன் வெளியிடப்பட்ட பட்டியல்படி, மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 23 லட்சத்து 45 ஆயிரத்து எட்டு வாக்காளர் உள்ளனர்.

பார்வைக்கு

பட்டியல்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், வரும் அக்., 29ம் தேதி, வாக்காளர் வரைவு பட்டியலை கலெக்டர் வெளியிடுகிறார். அனைத்து ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் ஓட்டுச்சாவடி மையங்களில், மக்கள் பார்வைக்காக வாக்காளர் வரைவு பட்டியல் வைக்கப்படும்.

வாக்காளர்கள், வரைவு பட்டியலில் உள்ள விவரங்களை சரிபார்த்து, தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம். வரைவு பட்டியல் வெளியிடப்படும் நாள் முதல் நவ., 28ம் தேதி வரையிலான ஒரு மாதத்துக்கு சுருக்கமுறை திருத்தம் நடைபெறும். நவ., மாதம், நான்கு நாட்கள் சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது.

சுருக்கமுறை திருத்தத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி, மொபைல் எண் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, வாக்காளரிடமிருந்த பூர்த்தி செய்து பெறப்படும். அதனடிப்படையில், வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஜன., மாதம் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்க, ஓட்டுச்சாவடி மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டியது கட்டாயமில்லை. https://voters.eci.gov.in/ என்கிற இணையதளம் வாயிலாகவும், Voter Helpline மொபைல் செயலி வாயிலாகவும், எங்கிருந்தாலும், வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வரும் ஜன., 1ம் தேதி 18 வயது பூர்ததியாகும் இளம் வாக்காளர்கள், பட்டியலில் பெயர் சேர்க்க தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும். 2025, செப்., 30ம் தேதி வரையிலான காலத்தில், 18 வயது பூர்த்தியாவோரும், பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.

வீடு வீடாக சரிபார்ப்பு

வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் - 2025ம் ஆண்டுக்கான முன் திருத்த பணிகளை, திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும், முன் திருத்த பணிகள் துவங்கியுள்ளன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், நேற்று முதல், வாக்கார்களை தேடி, வீடு வீடாக சென்று, வாக்காளர் பட்டியல் விவரங்கள் சரிபார்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.குறிப்பிட்ட முகவரியில் வாக்காளர் உள்ளாரா, இறந்த வாக்காளர் பெயர் நீக்க வேண்டியுள்ளதா, 18 வயது பூர்த்தியான இளம் வாக்காளர் உள்ளாரா என்கிற விவரங்களை வாக்காளர்களிடமிருந்து பெற்று, 'பி.எல்.ஓ.,' மொபைல் போன் செயலியில் பதிவு செய்கின்றனர். அக்., 18ம் தேதி வரை இந்த முன் திருத்த பணிகள் நடைபெறுகின்றன.








      Dinamalar
      Follow us