/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 1 பொதுத்தேர்வு: இன்றுடன் நிறைவு
/
பிளஸ் 1 பொதுத்தேர்வு: இன்றுடன் நிறைவு
ADDED : மார் 25, 2024 12:33 AM
திருப்பூர்:பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கான பொதுத்தேர்வு கடந்த 4ம் தேதி துவங்கியது. மாவட்டத்தில், 25 ஆயிரத்து, 633 பேர் தேர்வை எதிர்கொண்டனர். தனித்தேர்வர்கள், 284 பேர் தேர்வெழுதினர்.
பொருளியல், இயற்பியல், கணக்கு பதிவியல், வேதியியல் தேர்வுகள் எளிதாக இருந்த நிலையில், ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாக்களில் மட்டும் ஓரிரு கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவிதத்தனர்.
வரலாறு தேர்வில் மேப், ஐந்து மதிப்பெண் வினா சற்று கடினமாக இருந்தது. சென்டம் மதிப்பெண் எடுப்பதை தவிர்க்க, இவ்வாறு வினாத்தாள் இடம் பெறுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று கணிதம், விலங்கியல், வணிகவியல் தேர்வுகள் நடக்கவுள்ளது.
இன்றுடன் பிளஸ் 1 தேர்வுகள் முடிந்து விடைத்தாள்கள் மண்டல அலுவலகத்துக்கும், அங்கிருந்து விடைத்தாள் திருத்தும் மையத்துக்கும் அனுப்பி வைக்கப்படும். ஏப்ரல்., இரண்டாவது வாரம் விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து, மே 14ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

