/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 1 தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழ்
/
பிளஸ் 1 தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழ்
ADDED : மே 17, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;பிளஸ் 1 மாணவருக்கு இன்று பள்ளிகளில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
கடந்த, 7ம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகியது. மாவட்டத்தில், 26 ஆயிரத்து, 164 பேர் தேர்வெழுதி, 24 ஆயிரத்து, 917 பேர் தேர்ச்சி பெற்றனர். 1,247 தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாத மாணவருக்கு ஜூலையில் துணைத்தேர்வு நடக்கவுள்ளது. இந்நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு இன்று பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

