/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2 விடைத்தாள்கள் ஏப்., 2 முதல் திருத்தும் பணி
/
பிளஸ் 2 விடைத்தாள்கள் ஏப்., 2 முதல் திருத்தும் பணி
பிளஸ் 2 விடைத்தாள்கள் ஏப்., 2 முதல் திருத்தும் பணி
பிளஸ் 2 விடைத்தாள்கள் ஏப்., 2 முதல் திருத்தும் பணி
ADDED : மார் 25, 2024 12:48 AM
திருப்பூர்;கடந்த 1ம் தேதி துவங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு, 22ம் தேதி நிறைவடைந்தது. மாவட்டத்தின், 92 மையங்களில், 26, 325 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். தேர்வுகள் முடிவடைந்த நிலையில், மொழித்தாள், முக்கியத் தேர்வுகள் உள்ளிட்ட விடைத்தாள் தனித்தனியே பிரித்து கட்டி, அடுக்கும் பணி, 23ம் தேதி நடந்தது.
திருப்பூர் மாவட்டத்துக்கான விடைத்தாள் திருத்தும் மையமாகிய, குமார் நகர், இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம், விவேகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு மையங்களுக்கு விடைத்தாள்கள் பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளது.
மையங்களுக்கு, 24 மணி நேர போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விடைத்தாள்கள் திருத்துவதற்காக, வேறு மாவட்டங்களுக்கு கொண்டுசெல்லப்பட உள்ளது. ஏப்., 2ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்க உள்ளது. விடைத்தாள்களை திருத்தவுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடுகள் வழங்கப் பட்டுள்ளது.

