/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.எம்.எஸ்., நிர்வாகிகள் தேர்வு
/
பி.எம்.எஸ்., நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூன் 26, 2024 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரதிய மஸ்துார் சங்க (பி.எம்.எஸ்.,) மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் நடந்தது. தென்பாரத இணை செயலாளர் ராஜாஜி, மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
வரும் ஜூலை 23ல், பி.எம்.எஸ்., ஸ்தாபன தினம் கொண்டாடுவது, 2 ஆயிரம் உறுப்பினர்களை புதிதாக சேர்ப்பது, ஆக., 28ல் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுவது, சங்கத்தின், 70வது ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாடுவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவராக லட்சுமி நாராயணன், செயலாளராக மாதவன், செயல் தலைவராக செந்தில், பொருளாளராக சீனிவாசன் உட்பட நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.