ADDED : ஜூலை 23, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் வடக்கு மாவட்ட பி.எம்.எஸ்., சார்பில், 70வது ஆண்டு விழாவை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி அனுப்பர்பாளையத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் பிரபு, அனைத்து கிளைகளிலும் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, பி.எம்.எஸ்., 70வது ஸ்தாபன ஆண்டு குறித்து பேசினார். பொருளாளர் சீனிவாசன், பனியன் சங்க செயலாளர் விக்னேஷ் பிரபு மற்றும் நிர்வாகிகள் குமரவேல், செல்வராஜ், துரை, ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.