நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆம்புலன்ஸ் டிரைவர் பலி
தாராபுரம், பொன்னாபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ்குமார், 38; 108 ஆம்புலன்ஸ் டிரைவர். நேற்று தேவநல்லுார் - பொன்னாபுரத்தில் ரோட்டில் டூவீலரில் சென்றபோது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்தது. படுகாயமடைந்த ஜெகதீஷ்குமார் பலியானார். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.
4 லிட்டர் கள் பறிமுதல்
காங்கயம், நிழலி, என்.காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ், 41; விவசாயி. இவரது தோட்டத்தில், தென்னை மரங்களில் பானை கட்டி கள் இறக்கியது குறித்து ஊதியூர் போலீசாருக்கு தெரிய வந்தது. நான்கு லிட்டர் கள்ளை பறிமுதல் செய்து, கனகராஜ் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

