கிணற்றில் விழுந்து டிரைவர் பலி
சிவகாசியை சேர்த்த விஸ்வநாதன் மகன் மணிகண்டன், 36. இவர் கொடுவாய் - வேங்கிபாளையத்தில் உள்ள ஒரு எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்றபோது, கோவில்பாளையம் அருகே உள்ள கிணற்றில் நிலை தடுமாறி விழுந்து இறந்தார். அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வரவு செலவு பிரச்னை: 2 பேர் கைது
காங்கயம், சிவன்மலையை சேர்ந்தவர் பொன்னுலிங்கம், 42. மாத ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த உறவினரான விஷ்ணு, 26 என்பவர் சீட்டு பணம் கொடுக்கல் - வாங்கலில் பொன்னுலிங்கத்துடன் பிரச்னை ஏற்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, பொன்னுலிங்கத்தின் வீட்டுக்கு சென்ற விஷ்ணு மற்றும் நண்பர் பூபதி, 33 ஆகியோர் பொன்னுலிங்கத்தை கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், காங்கயம் போலீசார் விஷ்ணு மற்றும் பூபதியை கைது செய்தனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
திருப்பூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ராக்கியாபாளையம் - அணைப்புதுார் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சோதனையிட்டதில், ஆயிரத்து, 50 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. அரிசியை பறிமுதல்செய்த போலீசார், பொங்குபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 25 என்பவரை கைது செய்தனர்.
மின்கம்பி திருடிய இருவர் கைது
குன்னத்துார், ஆதியூரில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, சந்தேகப்படும் வகையில், மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின் கம்பிகளை ஆட்டோவில் ஏற்றி வந்தது தெரிந்தது. இருவரையும் பிடித்து விசாரித்தனர். திருவண்ணாமலையை சேர்ந்த திருச்செல்வன், 30, திருநெல்வேலியை சேர்ந்த அருள்ராஜ், 26 என்பதும், மின் கம்பிகளை திருடியது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, மின் கம்பிகள், ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பல்வேறு வழக்கில், 3 பேர் கைது
பட்டுகோட்டையை சேர்ந்த விக்னேஷ், 29. இவர் மங்கலம் ரோடு பழகுடோனில் பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் டூவீலரில் சென்றார். வழிமறித்த இருவர், விக்னேஷை தாக்கி, பணம், மொபைல் போனை பறித்து சென்றனர். சென்ட் ரல் போலீசார் விசாரித்து, சென்னையை சேர்ந்த தீபக்குமார், 25, சூரியபிரகாஷ், 23 மற்றும் மதுரையை சேர்ந்த நாகவிக்னேஸ்வரன், 25 என, மூன்று பேரை கைது செய்தனர்.
கஞ்சா விற்ற இருவர் கைது
ஒடிசாவை சேர்ந்த சமீரா பெகரா, 25. பீகாரை சேர்ந்த முகமது சகில் ஆகியோர், பொங்கலுார் - நாச்சிபாளையம் செந்தில் நகரில் வாடகை வீட்டில் தங்கி இருந்து, கஞ்சா விற்பனை செய்தனர். இதுகுறித்த தகவலின் பேரில், அவிநாசிபாளையம் போலீசார் இருவரையும் கைது செய்து, ஐந்து கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.